செளராஸ்டிரா என்னும் பார்ப்பன அடிவருடிகள்: விடாது கருப்பு
13ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் சார்பாக கம்பணர் தமிழகத்தின் மீது படையெடுத்து, முஸ்லீம்களை வென்று, நாயக்கர் ஆட்சியை உருவாக்கியதையும் மிகத் தெளிவாக செப்பேடுகளில் காணப்படுகின்றன.
விசுவநாத நாயக்கர் தொடங்கி, கிருஷ்ணப்ப நாயக்கர், திருமலை நாயக்கர், மங்கம்மாள், மீனாட்சி அரசி உட்பட 14 நாயக்க மன்னர்கள் கி.பி. 1529 முதல் கி.பி. 1736 வரையிலான சுமார் 207 ஆண்டுகள் மதுரையை ஆண்டுள்ளனர். பதினான்கு மன்னர்களின் பெயர்களால் தனித் தனித் தலைப்புகளில் அவர்களுடைய ஆட்சி முறையையும் அவர்கள் செய்த போர், கலைப் பங்களிப்பையும் பற்றி பல நூல்களில் விளக்கியுள்னர்.
மதுரை நாயக்க மன்னர்கள்/அரசியர் மொத்தம் பதின்மூன்று பேர் ஆண்டதாக இன்னொரு குறிப்பு சொல்லும். ஏனெனில் இந்தப் பட்டியலில் ராணி மங்கம்மா என்னும் அரசியார் அடங்கவில்லை. காரணம் அந்த அம்மையார் தன் மகனுக்காகவும் பேரனுக்காகவும் ரீஜண்ட் என்னும் பொறுப்பிலிருந்து அரசியல் செய்தவர் என்று சொல்லப்படுகிறது.
பண்டைய தமிழ் மன்னர்களின் வரலாற்றைக் கூறுவதோடு, மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தின் அரசியல், சமுதாய, பொருளாதார, சமய வரலாறுகளையும் பிறவற்றையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர் பல வரலாற்று ஆசிரியர்கள்.
தென்னிந்திய கோவில்களில் கர்ப்பக் கிரகத்தில் இருந்த தங்கத்தினைச் சூறையாடி கோவில்களையும் நகரங்களையும் கைப்பற்றி, அவர்களை அடக்கி ஆண்டு வந்த முகலாயர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறார் கிருஷ்ண தேவராயர் என்னும் அரசர். அவரின் ஆட்சிக்குப் பின் தென்னிந்தியாவில் மீண்டும் இந்து மன்னர்களின் கீழ் பெரும் மறுமலர்ச்சி ஏற்படுகிறது.
விஜய நகரப் பேரரசின் கீழ் வந்துள்ள மதுரையை ஆட்சி செலுத்துவதற்காக தன் பிரதிநிதிகளை நியமிக்க, தலைக்கோட்டைப் போரின் தோல்விக்குப் பிறகு மதுரையை நாயக்க மன்னர்களே முழுக்க முழுக்க தங்களது சுய ஆதிக்கத்தின் கீழ் ஆட்சி செலுத்த ஆரம்பிக்கிறார்கள். இப்படியாக 1529 முதல் 1739 வரை மதுரை நாடு நாயக்க மன்னர்களால் ஆட்சி செலுத்தப்பட்டு வந்துள்ளது.
நாயக்கர் காலத்தில், தமிழகம் மதுரை நாயக்கர் பகுதி என்றும், தஞ்சை நாயக்கர் பகுதி என்றும் செஞ்சி நாயக்கர் பகுதி என்றும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்தன. இதில் மதுரை நாயக்கர் பகுதி விரிவான ஆளுகைக்கு உட்பட்ட நாடாக இருந்தது. சேலம் உள்ளிட்ட கொங்கு நாடு மதுரை நாயக்கர் பகுதியோடு இணைந்திருந்தது. அப்பகுதி பாளையக்காரர்கள் மதுரையின் எழுபத்திரெண்டு பாளையப்பட்டுகளோடு சேர்ந்திருந்தார்கள்.
இம்மதுரை நாட்டை ஆண்ட நாயக்கர்களில் சீர்மை படைத்த வல்லரசர் விசவநாத நாயக்கர். இவர் 1529 முதல் 1564 வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு மதுரை நாயக்க நாட்டை ஆண்டவர். பெரும் வல்லமை படைத்தவர். இவர் விசுவநாத நாயக்கரின் தந்தை நாகம நாயக்கர் தென்மண்டல அதிபதியாக விசயநகரப் பேரரசில் இருந்தபோது அவருக்கு கணக்குப் பிள்ளையாகவும், பின்னர் பேரரசருக்கு நம்பிக்கையான களவாயாகவும் இருந்தார். விசவநாத நாயக்கரை மதுரைக்கு அரசாகப் நியமித்தவுடன் அவருக்கு துணையாக அனுப்பப்பட்டவர்தான் அரியநாத முதலி என்பவர். இவர் விசுவநாத நாயக்கருக்குத் தளவாயாக - தளபதியாக அமைச்சராக இருந்து செயல்பட்டவர். பாளையப்பட்டு அமைப்பு முறை உருவாகத் துணை நின்றவர். இந்த அரியநாத முதலியைப் பற்றி தனிக்கதை உண்டு.
விஸ்வநாத நாயக்கர் என்பவர் தலைமையில் 1529ல் தொடங்கிய நாயக்கர் ஆட்சி, மீனாட்சி என்ற பெண் நாயக்க மன்னர் ஆட்சியில் 1739ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. விஸ்வநாத நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், வீரப்ப நாயக்கர், இரண்டாம் கிருஷ்ணப்பர், முத்து வீரப்ப நாயக்கர்,முத்து கிருஷ்ணப்ப நாயக்கர், திருமலைநாயக்கர், இரண்டாம் முத்து வீரப்பர், சொக்கநாதர், மூன்றாம் முத்து வீரப்பர், ராணி மங்கம்மாள், மீனாட்சி என்று இரண்டு பெண்ணரசிகள் உட்பட 200 ஆண்டுகள் நாயக்க மன்னர்கள் மதுரை தேசத்தை ஆண்டு வந்துள்ளனர்.
1739ம் ஆண்டு ஆற்காட்டு நவாப் அனுப்பிய சந்தா சாகிப் என்பவனுக்கு, மதுரையைத் தாக்காமல் திரும்பிச் செல்வதற்காக ஒரு கோடி பணம் ராணி மீனாட்சி அளித்தும் சந்தா சாகிப்பு அவரை ஏமாற்றி மதுரையைக் கைப்பற்றிக் கொள்கிறான். அரசி மீனாட்சி தற்கொலை செய்து கொள்ள நாயக்கர் வம்சம் முடிவுக்கு வருகிறது.
அதன் பின்னர் ஆற்காடு நவாபும், அதன் பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் வரும்வரை மராட்டிய மன்னர்களும் மதுரையை ஆண்டுள்ளனர். பாண்டிய மன்னர்கள் எல்லாம் 14ம் நூற்றாண்டுடன் காணாமல் போய்விட மதுரையை தமிழரல்லாதவர்தான் ஏறத்தாழ 600 வருடங்கள் ஆண்டு வந்திருக்கின்றனர்.
இதில் மதுரையை 1623 முதல் 1659 வரை ஆண்ட திருமலை நாயக்கர் என்ற மன்னன் நாயக்கர் வம்சத்திலேயே மிகவும் புகழ் பெற்ற மன்னராக செங்கோலாட்சி செலுத்தியிருக்கிறார். மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம் கோவை, புதுக்கோட்டை, திருநெல்வேலி என்று ஒரு பெரிய சாம்ராஜ்யமே இவரது ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. இவர் ஆட்சி காலத்தில்தான் மதுரையில் மீனாட்சி கோவில் திருப்பணி, முக்குறுணிப் பிள்ளையார், தெப்பக்குளம், புது மண்டபம், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், திருவானைக்கா, திருவரங்கம், திருநெல்வேலி என்று பல கோவில்களை புனருத்தாரணம் செய்து, திருப்பணிகள் செய்துள்ளார்.
அழிந்த கோவில்களைப் புனர் நிர்மாணம் செய்வது, கோவில்களுக்குச் செல்வங்கள் வழங்குவது, திருவிழாக்கள் ஏற்படுத்துவது, போர் புரிவது என்ற பல்வேறு பணிகளுக்கு நடுவே ஒரு பிரம்மாண்டமான அரண்மனையையும் 1639ம் ஆண்டு நிர்மாணித்துள்ளார். மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் சித்திரைத் திருவிழா, வைகாசி வசந்த விழா, புரட்டாசி நவராத்ரி விழா, தையில் தெப்பத் திருவிழா என்று மக்கள் கூடவும், மகிழ்ச்சியாக கொண்டாடவும் திருவிழாக்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தியுள்ளார். அந்த வழக்கமும் திருவிழாக்களும் இன்று வரை தொடர்கின்றன.
உழுது, விதைத்து, உழைத்துக் களைத்த மக்களுக்கு, ஆண்டவன் தரிசனமும், வாண வேடிக்கைகளும், விருந்தும் படைத்து மகிழ்ச்சியாக ஆட்டம் பாட்டம் கூத்துக் கொண்டாட்டங்களுடன் வருடத்தின் சில தருணங்களை அனுபவிக்கும் வண்ணம் திட்டமிட்டு பல்வேறு விழாக்களை இந்து சமயத்துடன் இணைத்து உருவாக்கியுள்ளார் இந்த திருமலை நாயக்கர். இவரது உருவச் சிலைகள் இவர் திருப்பணி செய்த புது மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், அழகர் கோவில் போன்ற இடங்களில் காணக் கிடைக்கின்றன.
இவர் காலத்தில் மதுரையிலும் பிற ஊர்களிலும் கட்டிடம், நிலம், கோவில், குளம் என நிறைய மராமத்து நடவடிக்கைகள் மிகச் செழிப்பாக நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அரண்மணை கட்டுவது, கோவில் கட்டுவது, குளம் தோண்டுவது, வாய்க்கால் வெட்டுவது என்று ஏகத்தும் கட்டிடக் கலை, சிற்பக் கலை ஆட்களிடம் மிக சுறுசுறுப்பாக வேலை வாங்கியுள்ளார்.
புது மண்டபத்தில் இவரது அரசியை சிற்பமாக வடிவமைத்த அமைச்சர், சாமுத்ரிகா லட்சணத்தின்படி அரசியின் தொடையில் வடுவொன்று இருக்க வேண்டும் என்று அனுமானித்து அதையும் சிற்பத்தில் செதுக்கி விட, அவர் மீது சந்தேகம் கொண்ட மன்னர் அவரது கண்களை அவித்து விட்டதாக ஒரு பெருங்கதை உலவுகிறது. திருமலை நாயக்க மன்னர் ஏற்கெனவே பெண்கள் விஷயத்தில் கில்லாடி. அவரிடம் இவர்களின் பாச்சா பலிக்குமா?
தொடையில் வடுவுள்ள அரசியின் சிற்பத்தை புதுமண்டபத்தில் தேடிக் கண்டுபிடித்துப் புகைப்படம் எடுத்த சம்பவத்தையும் சுவை பட பார்ப்பன அடிவருடியான ஜேபி அவர்கள் தனது அகத்தியம் யாகூ மடலாடற் குழுவில் முன்னர் எழுதியுள்ளார். அந்த அரசியின் புகைப் படத்தை அவரது அகத்தியம் மடலாடற்குழு நூலிலும் வெளியிட்டுள்ளார். அந்த படத்தினை தேடிப் பார்த்து பின்னர் இணைக்கிறேன்!
திருமலை நாயக்க மன்னருக்கு நடனமும் பாட்டும் கேளிக்கையும் பெண்கள் சகவாசமும் அதிகமாக இருந்தது. தங்க நகை, பட்டு என்று போட்டுக்கொண்டு மினுக்குவதில் பெயர் போனவர் இவர். இவருக்கு பட்டு அங்கவஸ்திரம் செய்து கொடுப்பதற்காக வடக்கில் இருந்து செளராஸ்டிர இன மக்களை வரவழைத்து அவர்களை மஹாலைச் சுற்றியுள்ள தெருக்களில் நிரந்தரமாகக் குடி வைத்தார்.
செளராஸ்டிரர்கள் திருமலை நாயக்க மன்னனுக்கு பட்டு அங்கவஸ்திரம் செய்து கொடுத்து அவனை செளராஸ்டிரர்கள் காக்கா பிடித்த கதையை பிரதீப் அவர்களே எழுதி இருக்கிறார். இதோ படியுங்கள்.
ஏற்கெனவே இவரிடம் மூத்த அறிவுரையாளர்களாக இருந்த பார்ப்பன அதிகாரிகளுக்கு அடுத்து படிப்படியாக செளராஸ்டிரர்களும் முன்னேறினார்கள். செளராஸ்டிரர்கள் இயற்கையாகவே அதிக வலுவில்லாதவர்கள் பார்ப்பனர்களைப் போலவே. ஆனால் பார்ப்பனரின் தந்திரம் நூற்றுக்கு நூறு இவர்களிடத்தும் உண்டு. பார்ப்பனர்களைப் பார்த்து தாங்களும் வடமொழியான சமஸ்கிருதத்தினைப் படித்தார்கள்.
தமிழை காதல் செய்வோன் எவனாயினும் அவன் தமிழனே. செளராஸ்டிரர்கள் தம்மை தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு கோபமில்லை. ஆனால் தன் தாய்மொழி செளராஸ்டிரம் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள்ளே இருந்து கொண்டே வடமொழியான சமஸ்கிருதத்தினை ஆதரித்து தமிழுக்கு வேட்டு வைக்கிறான் பாருங்கள் அவன்தான் தமிழ்த்துரோகி. அதனைத்தான் நான் இங்கே வன்மையாக கண்டிக்கிறேன்!
செளராஸ்டிரப் பெண்கள் பார்ப்பனப் பெண்கள் போலவே மிக அழகானவர்கள். அவர்களை நடன மங்கைகளாக ஆடவைத்துப் பார்க்க திருமலை மன்னருக்கு மிகவும் ஆசை. அதற்காக அவர் தன் அந்தரங்க அதிகாரிகளின் மூலம் ஆணையும் பிறப்பித்தார்!
பட்டுநூல்கார சவுராஸ்டிர இனப் பெண்கள் நடனம் ஆடியதை நண்பர் ஆழியூரான் கூட எனக்கு முன்பாக எழுதி உள்ளார் இங்கே. பார்க்க...
அழகான செளராஸ்டிர இனப்பெண்களை தனது அந்தப்புரத்திலும் வைத்து அழகு பார்த்ததாக இன்னும் சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இன்னும் சிலரோ மன்னர் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று வந்ததாக குறிப்பிடுகின்றனர்!
இத்தாலிய, முகலாய, இந்திய ஆகிய மூவகைக் கட்டிடக் கலைகளின் சிறப்புகளை ஒருங்கே இணைத்து அவரின் அரண்மனையை வடிவமைத்துள்ளார் நாயக்கர். சுண்ணாம்பு, வெல்லச்சாறு, வஜ்ரம், செங்கல் போன்றவை கொண்டு இரும்புத் தூண்களின் உதவியின்றியே இந்த அழகிய அரண்மனை கட்டப் பட்டுள்ளது. இந்த அரண்மனையில் சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்ற இரு பகுதிகளும், அந்தப்புரம், நாடக சாலை, படைக்கலன்கள் வைக்கும் இடம், ஊழியர் வசிக்குமிடம், பூஜை செய்யக் கோவில், வசந்த் வாவி, பதினெட்டு வித இசைக் கருவிகள் வைக்கும் இடம், பூங்காக்கள், அரியணை மண்டபம் என்று ஒரு அரண்மனைக்குரிய அனைத்துப் பகுதிகளுடன் இது கட்டப்பட்டுள்ளது.
இதில் சொர்க்க விலாசத்தில் திருமலை நாயக்கரும், ரங்க விலாசத்தில் அவர் தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்திருக்கின்றனர். பெரிய மதில் சுவர்களுடன் 900 அடி நீளம், 660 அடி அகலம், 40 அடி உயரம் என்று மிகப் பெரிய அரண்மனையாகக் கட்டப்பட்டுள்ளது.
திருமலை நாயக்கருக்குப் பின் வந்த சொக்கநாத நாயக்கர் திருச்சிக்குத் தலைநகரை மாற்றும் பொழுது ஒரு சில பகுதிகளை இடித்து விட, மழையிலும், காற்றிலும் மீதியுள்ள பகுதிகள் அழிந்து போக, இப்பொழுது சொர்க்க விலாசம் என்ற பகுதியும், நாடக சாலை என்ற நடனசாலையும் மட்டுமே மிஞ்சியுள்ளன. இதன் கிழக்குப் பகுதியில் ரங்க விலாசத்தின் எஞ்சியுள்ள பத்து தூண்கள் மட்டும் இன்னும் ஒரு தெருவில் மிச்சமுள்ளது. 18 வகை இசைக்கருவிகள் வாசிக்கப்பட்ட இடம் இன்று நவபத்கானா தெரு என்று மஹாலை ஒட்டி இருக்கிறது.
விஜய நகர பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அப்போது தமிழகம் இருந்தது. அப்பேரரசு, தன் பரந்த நாட்டை ஆள, ஆங்காங்கே தங்களது தளபதிகளை நியமித்தது. அப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின், அவர்கள் அக்குறு நாடுகளின் தலைவர்களானார்கள். அப்படி ஆளப்பட்டதுதான் இந்த மதுரை. நாயக்க மன்னர்கள் கீழ் பணியாற்றிய சிறு தலைவர்கள், ஜமீந்தார்கள் ஆனார்கள். பின்னர் ஆங்கில அரசு அவர்களை பாளையக்காரர்களாக அறிவித்தது. அதாவது, ஆங்கில அரசுக்கு கப்பம் கட்டுபவர்களானார்கள். கப்பம் கட்ட மறுத்தவன் வீரபாண்டிய கட்டபொம்மலு நாயக்கர்.
இக்காலத்தில்தான், தெலுங்கு பேசும் மக்களும் தமிழகத்தில் பெருமளவில் வந்து குடியேறினர். அல்லது குடியேற்றப்பட்டனர். இவர்கள் பெரும்பானோர், மதுரை, திருநெல்வேலி, இராமனாதபுரம் மாவட்டங்கள்களில்தான் குடியேறினர்.
கம்பள நாய்க்கர் என்ற சொல்லின் திரிபுதான் கம்மாள நாயக்கர். அல்லது கம்மாளர்கள் என்றும் சொல்லலாம். எழுத்தாளர் கி.இராஜ நாராயணன் இந்த இனத்தவர்தான். அவர் அன்றைய மக்களின் கலாச்சாரத்தைப்பற்றிய சுவையாகவும், நகைச்சுவையாகவும் நிறைய எழுதியிருக்கிறார். 'கரிசல் காட்டு கடுதாசி' படித்துப் பார்க்கவும்.
இவர்கள் வைணவர்கள். விஜய நகர மன்னர்கள் வைணவர்கள். தாய் மொழி தெலுங்கு. வீட்டில் தெலுங்கு பேசுவர். வெளியில் தமிழ். ஆனால், இவர்கள் தெலுங்கு, ஆந்திர மக்களுக்கு சிரிப்பை ஊட்டுமாம். அவ்வளவு ஓட்டையாம்.
இப்போது இம்மக்கள் முழுக்க முழுக்க தமிழர்களே. இவர்கள் தெலுக்கு பார்ப்பனராக இல்லாததால், வைணவத் தெய்வங்களைக்காட்டிலும், கிராமத்து தேவதைகளையும், பிற தெய்வங்களையும் வணங்குவர். வீ.பா.க.பொம்முவின் குலதெய்வம் கிருஷ்ணர் என்று பலர் நினைப்பார்கள். அது உண்மையல்ல. அவரின் தெய்வம் ஜக்கம்மா. இவர் கிராமத்து தெய்வம்.
வீரபாண்டிய கட்ட பொம்மு திருச்செந்தூர் முருகனிடம் தீவிர பக்தி கொண்டவர். அக்கோயிலுக்கு ஏராளம் செய்தவர் என பல குறிப்புகள் அழியாமல் கோயிலின் இன்னும் உள. வைகாசி விசாகத்திற்கும், கந்த சஷ்டிக்கும் (திருச்செந்தூரில் மிகப்பெரும் விழாக்கள்) வீரர்களும், அமைச்சர்களும் புடை சூழ, பாத யாத்திரை வருவாராம் கட்டபொம்மு. பாஞ்சாலங்குறிச்சி எட்டயபுரத்தின் எல்லையில் உள்ளது. எட்டயபுரம் தூத்துக்குடியிலிருந்து பத்தாவது மைல். தூத்துக்குடியிலுருந்து திருச்செந்தூருக்கு 35 மைல்கள்.
ராணி மங்கம்மா என்னும் பெண் அரசியார் மதுரை நாட்டின் நாயக்க அரசியாக இருந்தவர். அவர் தன் மகனுக்காகவும் பேரனுக்காகவும் மதுரை அரசை ஆண்டார். அவர் எவ்வளவோ பல நன்மைகளை மதுரை நாட்டுக்குச் செய்திருக்கிறார்கள். அவர்களின் பெருமுயற்சியாலும் ராஜதந்திரத்தாலும் மதுரை நாடு மேலும் ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது.
பெருவீரரும் பயங்கரமான மூளையுள்ள ஆசாமியுமான கிழவன் சேதுபதி, அவரைவிடவும் பயங்கரமான ஒளரங்கசீப், அவனுடைய ஆட்கள், மராத்தியர், டச்சுக்காரர், பாளையக்காரர்கள் போன்ற பலரைச் சமாளித்தார் அந்த அம்மையார். ஆனால் அந்த அம்மையார் அந்தப் பதவியில் இருக்கும்போது எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும்போது நமக்கு வியப்பும் ஆதங்கமும் ஒருசேர ஏற்படுகிறது.
மொத்தம் ஆண்ட அத்தனை நாயக்க மன்னர்களில் பிரபலமானவர்கள் திருமலை நாயக்கரும் மங்கம்மாவும்தான். திருமலை நாயக்கரோ வலுவும் வசதியும் மிக்க சர்வாதிகாரியாகவும் யதேச்சாதிகாரியுமாக இருந்தவர். ஆனால் மங்கம்மாவோ ரீஜண்ட்தான். இருப்பினும் திருமலை நாயக்கருடன் பெயர் விளங்கும் பேரரசியாக விளங்குபவர் ராணி மங்கம்மாதான்.
இக்காலத்தில் ஒரு பெண் ஆட்சியில் இருப்பது என்பது கஷ்டமான சாதனையாக இருக்கிறது. ஆனால் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்றால்? நினைத்துப் பாருங்கள். இருப்பினும் இந்த ஈராயிரம் ஆண்டுகளில் மதுரையை ஆண்டவர்களில் நல்ல பெயருடனும் புகழுடனும் விளங்குபவர் மங்கம்மா.
நவாபின் மகனாகிய முகம்மது அலி என்பவனுக்கும் சந்தா சாஹிப் என்னும் மாப்பிள்ளைக்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது அப்போது. சந்தா சாஹிப்பின் கை வலுவாக இருந்த சமயத்தில் மதுரை நாட்டின் கடைசி நாயக்க அரசியாக இருந்த ராணி மீனாட்சியை மோசடி செய்து கோடிக்கணக்கில் பெரும்பணத்தையும் கைக்கொண்டான். சுமார் நான்கு கோடி வெள்ளி என்று தகவல்கள் சொல்கின்றன. மனமுடைந்த ராணி மீனாட்சி தற்கொலை செய்துக ொண்டார். அவருடைய வளர்ப்பு மகனாகிய முத்துவிஜய திருமலை நாயக்கர் சிவகங்கை மன்னராகிய முத்து வடுகநாதருடைய ஆதரவில் அந்த சமஸ்தானத்தில் ஓருரில் இருந்தார். அவருக்குப் பின்னர் அவருடைய மகனை சின்ன மருது பாண்டியர் ஆதரித்து வைத்திருந்தார். சந்தா சாஹெப் ஃபிரெஞ்சுக்காரர்களின் உதவியோடு செயல்பட்டான்.
முஹம்மது அலி பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியோடு சேர்ந்து கொண்டான். அப்போது உலகம் முழுமையிலும் வெவ்வேறு இடங்களில் பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் போட்டியும் போர்களும் நடந்தன.
நன்றி:-
ஆழியூரான்,
எஸ்பிரதீப்,
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,
விடுதலைப் போரில் வேலு நாச்சியார் - முனைவர் ம. நடராசன்,
தமிழகத்தை ஆண்ட பண்டைய தமிழ் மன்னர்கள்,
நாயக்க வம்சம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|